பொதுவாகவே தமிழகத்தின் வடக்குமுகத்தில் வசிப்பவர்களுக்கு தென்தமிழகத்தின் அடியாழத்தில் நீந்த வேண்டும் என்ற ஆவல் இருக்கும். என்னுடைய நெடுநாள் ஆசையும் அது தான். காரணம், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வைக்கம் முஹம்மது பஷீர் போன்றோர்களினால் எனக்கு அறிமுகமான சேர நாட்டின் எழில். கலைப் படைப்பு என்றாலே அதில் ஒரு துளியேனும் மிகை பொதிந்திருக்கும். மிகையும் யதார்த்த உலகும் ஒன்றும் புள்ளி ஒரு கனவு நிலை. நானும், நண்பர் எஸ்ஸும் அப்படி ஒரு கனவுலகை எதிர்நோக்கியே மூன்று …