பாரதி – காலத்தை வென்றவன்

(காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் பாரதியின் 99-ஆவது வருட நினைவு தினத்தன்று (11.09.2020)  கொல்கத்தா பாரதி தமிழ் சங்கத்திற்காக இணைய வழியில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். உரையின் பொழுது பாடல்கள் சிலவற்றைப் பாடினேன், அது இங்கில்லை. தொழில்நுட்பக் கோளாறினால் உரையில் பாதி பதிவாகவில்லை, ஆகவே இங்கு முழுமையாக அளித்துள்ளேன்.) அனைவருக்கும் வணக்கம். காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் உள்ள முரண் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" …

Continue reading பாரதி – காலத்தை வென்றவன்

வான் நகும்

துள்ளி எழுந்தமர்ந்தேன். மன நல ஆலோசகர் ஒருவர் வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் எதிரில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு முறை கடுங்குளிர் உறக்கத்திலிருந்து மீளும் பொழுதும் இந்தச் சடங்கு நடந்தேற வேண்டும் என்பது சட்டம். தீராத துக்கத்தில் அழும் குரலொன்று பக்கத்து அறையிலிருந்து வந்தது. சரிதான், ஆஷ்வெல் எழுந்துவிட்டான். என்னிடம் சொல்லிக்கொண்டு ஆலோசகர் விரைந்தார். வெளிர் நீலக் காலுறைகளும் கருஞ்செருப்புகளும் எனக்காகக் காத்திருந்தன. இந்த முறை என் விண்ணப்பப் படிவங்களைக் கூர்ந்து படித்திருக்கிறார்கள். சென்ற முறை அந்திச் சிவப்பில் செருப்பு …

Continue reading வான் நகும்

அடைக்கும் தாழ்

ஆறாவது முறை அழைப்பு வரும் பொழுது எடுத்துத் தான் ஆக வேண்டும் போல் ஆகிவிட்டது. வாசு அக்கா தான், ஏதோ வேலையாம், ஒரு எட்டு கிராமத்திற்கு வர முடியுமா என்று கேட்கிறாள். கிராமம் என்றால் சாலிக்ராமம். நடேசன் நகரிலிருந்து என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே  அந்த உடைந்த சுண்ணாம்புச் சிலை மனிதனின் வீடு வழியாக ஜூபிட்டரை மிதித்தால் வாசு அக்காவின் வீடு வந்துவிட்டிருந்தது. ஓர் இரு சக்கர வாகனமும் ஆட்டோவும் எதிரெதிர் வந்தால் டிராபிக் ஜாம் ஆகும் …

Continue reading அடைக்கும் தாழ்

தென்தமிழக பயணம்

பொதுவாகவே தமிழகத்தின் வடக்குமுகத்தில் வசிப்பவர்களுக்கு தென்தமிழகத்தின் அடியாழத்தில் நீந்த வேண்டும் என்ற ஆவல் இருக்கும். என்னுடைய நெடுநாள் ஆசையும் அது தான். காரணம், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வைக்கம் முஹம்மது  பஷீர் போன்றோர்களினால்  எனக்கு அறிமுகமான சேர நாட்டின் எழில். கலைப் படைப்பு என்றாலே அதில் ஒரு துளியேனும்  மிகை பொதிந்திருக்கும். மிகையும் யதார்த்த உலகும் ஒன்றும் புள்ளி ஒரு கனவு நிலை. நானும், நண்பர் எஸ்ஸும் அப்படி ஒரு கனவுலகை எதிர்நோக்கியே  மூன்று …

Continue reading தென்தமிழக பயணம்