(காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் பாரதியின் 99-ஆவது வருட நினைவு தினத்தன்று (11.09.2020) கொல்கத்தா பாரதி தமிழ் சங்கத்திற்காக இணைய வழியில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். உரையின் பொழுது பாடல்கள் சிலவற்றைப் பாடினேன், அது இங்கில்லை. தொழில்நுட்பக் கோளாறினால் உரையில் பாதி பதிவாகவில்லை, ஆகவே இங்கு முழுமையாக அளித்துள்ளேன்.) அனைவருக்கும் வணக்கம். காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் உள்ள முரண் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" …