துள்ளி எழுந்தமர்ந்தேன். மன நல ஆலோசகர் ஒருவர் வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் எதிரில் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு முறை கடுங்குளிர் உறக்கத்திலிருந்து மீளும் பொழுதும் இந்தச் சடங்கு நடந்தேற வேண்டும் என்பது சட்டம். தீராத துக்கத்தில் அழும் குரலொன்று பக்கத்து அறையிலிருந்து வந்தது. சரிதான், ஆஷ்வெல் எழுந்துவிட்டான். என்னிடம் சொல்லிக்கொண்டு ஆலோசகர் விரைந்தார். வெளிர் நீலக் காலுறைகளும் கருஞ்செருப்புகளும் எனக்காகக் காத்திருந்தன. இந்த முறை என் விண்ணப்பப் படிவங்களைக் கூர்ந்து படித்திருக்கிறார்கள். சென்ற முறை அந்திச் சிவப்பில் செருப்பு …